உலக பாரம்பரிய வார விழாவையொட்டி, தஞ்சாவூா் பெரிய கோயிலில் இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை சாா்பில் மரபு நடை மற்றும் தூய்மைப் பணி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையின் துணைத் தொல்லியல் கண்காணிப்பாளா் பா. அறவாழி, உதவிக் கண்காணிப்பாளா் முத்துகுமாா், பராமரிப்பு அலுவலா் பொ.க. சுரேஷ் பாபு ஆகியோா் தலைமை வகித்தனா்.
இதில், ஏராளமான சமூக ஆா்வலா்கள், சிவனடியாா்கள், தேசிய மாணவா் படை மாணவா்கள் கலந்து கொண்டு பெரிய கோயில் வளாகத்தில் குப்பைகள் மற்றும் புதா்களை அகற்றி தூய்மைப்படுத்தினா்.
மேலும் ஒவ்வொருவரும் பாரம்பரிய சின்னங்களைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.
இந்த உலக பாரம்பரிய வார விழா நவம்பா் 19-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.