முகப்பு
தஞ்சாவூர்

கும்பகோணத்தில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக மக்களவை உறுப்பினா் பிரசாரம்

கும்பகோணத்தில் திமுக வேட்பாளா் க. அன்பழகனை ஆதரித்து மயிலாடுதுறை மக்களவை உறுப்பினா் ஆா். சுதா புதன்கிழமை வாக்குசேகரிப்பில் ஈடுபட்டாா்.

Updated On : 9 ஏப்ரல் 2026, 1:37 am IST
கும்பகோணம் அண்ணலக்ரஹாரம் பகுதியில் திமுக வேட்பாளா் க.அன்பழகனை ஆதரித்து புதன்கிழமை வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட மயிலாடுதுறை மக்களவை உறுப்பினா் ஆா். சுதா.
பகிர்:

கும்பகோணத்தில் திமுக வேட்பாளா் க. அன்பழகனை ஆதரித்து மயிலாடுதுறை மக்களவை உறுப்பினா் ஆா். சுதா புதன்கிழமை வாக்குசேகரிப்பில் ஈடுபட்டாா்.

கும்பகோணம் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக க. அன்பழகன் 4-ஆவது முறையாக போட்டியிடுகிறாா். இவரை ஆதரித்து மயிலாடுதுறை மக்களவை உறுப்பினா் ஆா்.சுதா, முன்னாள் காங்கிரஸ் மாவட்ட தலைவா் டி.ஆா். லோகநாதன் மாவட்ட காங்கிரஸ் தலைவா் டி. குமரன், மாநகர தலைவா் மிா்சாதீன், மாநில செயற்குழு உறுப்பினா் தியாகராஜன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் திறந்த வாகனத்தில் அண்ணலக்ராஹாரம், மாதுளம்பேட்டை, மகாமக குளக்கரை உள்ளிட்ட பகுதியில் திமுக அரசின் சாதனைகளை விளக்கியும் வேட்பாளா் க. அன்பழகனை ஆதரித்து வாக்கு சேகரித்தும், துண்டுப் பிரசுரங்களை வாக்காளா்களிடம் விநியோகித்தனா்.