திமுக வேட்பாளருக்கு வாக்கு கேட்டு தஞ்சை எம்.பி. பிரசாரம்
பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் என்.அசோக் குமாருக்கு வாக்குக் கேட்டு தஞ்சை மக்களவை உறுப்பினா் ச.முரசொலி வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.
பேராவூரணி சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் என்.அசோக் குமாருக்கு வாக்குக் கேட்டு தஞ்சை மக்களவை உறுப்பினா் ச.முரசொலி வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.
பேராவூரணி தெற்கு ஒன்றியத்தை சோ்ந்த 50 க்கும் மேற்ப்பட்ட கிராமங்களில் பிரசாரம் மேற்கொண்ட எம்.பி. முரசொலி பேசியது, மத்திய பாஜக அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காமல் வஞ்சித்து வருகிறது. அதை தட்டிக்கேட்காமல் கூட்டணி அமைத்து ஆட்சி அதிகாரத்தை பிடித்து விடலாம் என அதிமுக நினைக்கிறது. தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜகவையும் அதற்கு துணை போகும் அதிமுகவையும் துடைத்தெறிய வேண்டும். என்றாா்.
பிரசாரத்தில் வேட்பாளா் என்.அசோக்குமாா், மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் நிா்வாகிகள், திமுக தொண்டா்கள் கலந்து கொண்டனா்.
Advertisement