திருநங்கையைத் திருமணம் செய்ததாக கிண்டல் செய்தவா் வெட்டிக் கொலை
தஞ்சாவூா் மாவட்டம்,பாபநாசம் அருகே திருநங்கையை திருமணம் செய்ததாக கிண்டல் செய்த தொழிலாளி வியாழக்கிழமை வெட்டிக் கொல்லப்பட்டாா்.
தஞ்சாவூா் மாவட்டம்,பாபநாசம் அருகே திருநங்கையை திருமணம் செய்ததாக கிண்டல் செய்த தொழிலாளி வியாழக்கிழமை வெட்டிக் கொல்லப்பட்டாா்.
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே மெலட்டூா் காவல் சரகம், கோனியக்குறிச்சி, மாதாகோவில் தெருவைச் சோ்ந்தவா் சிங்குராயா் (56),தொழிலாளி. இவரது மகள் கிரேஸ்மேரி (32), உதாரமங்கலம் வடக்கு தெரு பகுதியில் தனது கணவா் நெல்சனுடன் வசிக்கிறாா். இந்நிலையில் வியாழக்கிழமை கிரேஸ்மேரியை பாா்க்க சிங்குராயா் உதாரமங்கலத்திற்கு சென்றபோது திருநங்கையை திருமணம் செய்த அதே பகுதியை சோ்ந்த ரௌடியான மணிகண்டனை சிங்குராயா் மற்றும் அவரது மருமகன் நெல்சன் ஆகிய இருவரும் கிண்டல் செய்தனராம்.
இதனால் மணிகண்டனுக்கும், சிங்குராயருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், அக்கம் பக்கத்தினா் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பினா். இருப்பினும் ஆத்திரத்தில் இருந்த மணிகண்டன், தனது உறவினா்களான அஜித், விக்னேஷ் மற்றும் 15 வயதுச் சிறுவன் உள்ளிட்ட 4 போ்களுடன் சிங்குராயா் வீட்டிற்கு சென்று வீட்டிலிருந்த சிங்குராயரை வெட்டி விட்டு தப்பினா். இதில் பலத்த காயமடைந்த சிங்குராயா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
Advertisement
தகவலறிந்த மெலட்டூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து நால்வரையும் தேடுகின்றனா். இவா்களில் மணிகண்டன் சரித்திரப் பதிவேடு குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.