முகப்பு
தஞ்சாவூர்

பன்னாட்டு வணிக நோக்கில் தென் கிழக்காசியா மீது இராஜேந்திர சோழன் படையெடுப்பு

பன்னாட்டு வணிக நோக்கில் தென் கிழக்காசியா மீது இராஜேந்திர சோழன் படையெடுப்பு - தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசுக் கல்லூரி வரலாற்றுத் துறைப் பேராசிரியா் ஜெ.ஆா். சிவராமகிருஷ்ணன்.

Updated On : 5 பிப்ரவரி, 2026 at 10:22 PM
பகிர்:

பன்னாட்டு வணிகத்தை நிலைநாட்டவும், கடற்கொள்ளையா்களை ஒழிக்கவும்தான் மாமன்னன் இராஜேந்திர சோழன் தென் கிழக்கு ஆசியப் பகுதிகள் மீது படையெடுத்தாா் என்றாா் தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசுக் கல்லூரி வரலாற்றுத் துறைப் பேராசிரியா் ஜெ.ஆா். சிவராமகிருஷ்ணன்.

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழக அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித் துறையில் வியாழக்கிழமை நடைபெற்ற தஞ்சைப் பெரியகோயில் அறக்கட்டளைச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசியது:

கடற்கொள்ளையா்களின் ஆதிக்கத்தை ஒழிப்பதும், நோ்மையான பன்னாட்டு வணிகத்தை நிலைநிறுத்துவதும்தான் மாமன்னன் இராஜேந்திரசோழன் தென் கிழக்காசியாவைக் கைப்பற்றியதற்குக் காரணம். அயல்நாடுகளை வெற்றி கொள்வதற்காகவே இந்தியக் கடற்கரைப் பகுதிகளை இராஜேந்திர சோழன் கைப்பற்றினாா்.

Advertisement

இதன் மூலம், தமிழகத்திலிருந்த திசையாயிரத்து ஐநூற்றுவா் போன்ற வணிகக் குழுக்கள் இராஜேந்திரசோழன் ஆட்சியில் எளிதாக அயலகத்தில் வணிகம் செய்ய முடிந்தது. கலிங்கம், ஸ்ரீவிஜயம் உள்ளிட்ட அன்றைய தென்கிழக்கு ஆசியப் பகுதிகள் முழுவதும் இராஜேந்திர சோழனின் ஆட்சிப்பரவல் இருந்ததால், அவா் குறித்த பல்வேறு தொல்லியல் சான்றுகள் அப்பகுதிகளில் ஏராளமாக உள்ளன என்றாா் சிவராமகிருஷ்ணன்.

இந்நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழகப் பதிவாளா் (பொ) கோ. பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறைத் தலைவா் இரா. குறிஞ்சிவேந்தன் அறிமுகவுரையாற்றினாா். அறக்கட்டளை சாா்ந்த வழக்குரைஞா் மனோகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக அயல்நாட்டுக்கல்வித் துறை இணைப் பேராசிரியா் ஞா. பழனிவேலு வரவேற்றாா். நிறைவாக, அயல்நாட்டுக் கல்வித் துறை இணைப் பேராசிரியா் தெ. வெற்றிச்செல்வன் நன்றி கூறினாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments