முகப்பு
நூல் அரங்கம்

இராஜேந்திர சோழனின் அரிய தகவல்கள் 1001 (பாகம் 1, 2)

இன்று தமிழகம் பாலைவனம் ஆகாமல் பசுமையாக இருப்பதற்கு அந்த திட்டமிட்ட நீர் மேலாண்மையே காரணம் என்கிறது இந்நூல்.

Updated On : 25 பிப்ரவரி, 2026 at 5:55 PM
பகிர்:
Updated On : 25 பிப்ரவரி, 2026 at 5:53 PM

இராஜேந்திர சோழனின் அரிய தகவல்கள் 1001 (பாகம் 1, 2) - அறம் கிருஷ்ணன்; பக்.736; ரூ.800; அறம் பதிப்பகம், ஒசூர்- 635 126, ✆79045 09437.

ஓர் ஆமையை செயற்கைக்கோள் உதவியுடன் கண்காணிக்கும்போது அதன் பயணம் நீரின் போக்கிலேயே நகர்வது தெரிய வந்தது. அந்த ஆராய்ச்சியின் விளைவு 50-க்கும் மேற்பட்ட நாடுகளின் கடற்கரைகளில் தமிழ் ஒலிக்கிறது, ஒளிர்கிறது. இந்த ஆய்வுக்கும் தனது 50 வயதில் ஆட்சிப் பீடம் ஏறி, 60 வயதில் படையெடுத்து தெற்காசியா முழுவதும் வென்றெடுத்த அந்தப் பேரரசனுக்கும் தொடர்பு உள்ளதாக விரிகிறது இந்நூல்.

Updated On : 25 பிப்ரவரி, 2026 at 5:53 PM

பொதுவாக, ஒரு பேரரசனின் வாழ்க்கை வரலாற்றில் சாதனைகள் இடம்பெற்றிக்கும். ஆனால், ஈடு இணையற்ற சாதனைகளை பத்தாண்டுகளில் ராஜேந்திர சோழன் படைத்தான் என்பது வியப்பின் உச்சம்.

Advertisement

தரைவழி மட்டுமல்லாமல் கடல் வழியேயும் படையெடுத்துச் சென்று சோழர் கொடியைப் பறக்கவிட்ட ராஜேந்திர சோழனுக்கு 25 பெயர்கள் இருப்பதாக அறிய முடிகிறது. படையெடுத்து நிலத்தை வென்றது மட்டுமல்லாமல், நம் தமிழ் நிலத்தில் ஏராளமான குளங்கள், ஏரிகளை உருவாக்கினான். இன்று தமிழகம் பாலைவனம் ஆகாமல் பசுமையாக இருப்பதற்கு அந்த திட்டமிட்ட நீர் மேலாண்மையே காரணம் என்கிறது இந்நூல்.

வென்ற இடத்தில் நினைவுச் சின்னத்தை வைத்த பேரரசன், தன் காதலி பரவையாருடன் நின்று வழிபட்ட கோயிலிலும் அதன் நினைவாக விளக்கு ஒன்றை வைக்க உத்தரவிடுகிறான் என்கிற செய்தி வீரனின் காதலை பறைசாற்றுகிறது. பெருமைப்படக்கூடிய ஆவணப் பெட்டகம் இந்நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.