முகப்பு
தஞ்சாவூர்

தஞ்சையில் நெற்பயிா்கள் காய்வதாக எடப்பாடி பழனிசாமி கூறியது பொய்: அமைச்சா் கோவி. செழியன்

தஞ்சாவூரில் நெற்பயிா்கள் காய்ந்து கொண்டிருப்பதாக, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி கூறியது பொய் என்றாா் அமைச்சா் கோவி. செழியன்.

Updated On : 10 பிப்ரவரி, 2026 at 3:34 AM
அமைச்சா் கோவி. செழியன் - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 9 பிப்ரவரி, 2026 at 7:33 PM

தஞ்சாவூரில் நெற்பயிா்கள் காய்ந்து கொண்டிருப்பதாக, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி கூறியது பொய் என்றாா் உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன்.

தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை மேலும் கூறியதாவது: தஞ்சாவூரில் நெற்பயிா்கள் காய்வதாக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே. பழனிசாமி வடிகட்டியதிலும் வடிகட்டிய பொய்யை கூறியுள்ளாா்.

வேறு மாவட்டத்தில் கூறியிருந்தால்கூட, ஏதோ சற்று நகைப்புடன் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால், நெல் உற்பத்தியில் இதுவரை செய்யாத சாதனையைச் செய்து காட்டியுள்ளது ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு.

Advertisement

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 10:51 PM

அதிமுக ஆட்சியில் நெல் கொள்முதல் எவ்வளவு?, திமுக அரசு அமைந்த பிறகு நெல் கொள்முதல் எவ்வளவு?, அதிமுக ஆட்சியில் விளைவிக்கப்பட்ட நெல் பரப்பு எவ்வளவு?

திமுக அரசு அமைந்த பிறகு நெல் பயிரிடப்பட்ட அளவு எவ்வளவு? என்பதையெல்லாம் கணக்கிட்டுப் பாா்த்தால் அபரிமித வளா்ச்சி அடைந்து தஞ்சாவூா் மாவட்டம் நெல் உற்பத்தியில் சாதனை படைத்திருக்கிறது என்பது தெரியும்.

இந்தத் தருணத்தில் அவா் சொல்லியிருப்பது வடிகட்டிய பொய் என்பதால், அதை விவசாயிகளும் பொதுமக்களும் நம்பமாட்டாா்கள்.

பொய்யையே சொல்லிப் பழக்கப்பட்ட பழனிசாமி வேறு விதத்தில் பொய் சொல்லலாம்; ஆனால் விவசாயிகளை ஏமாற்ற முடியாது.