முகப்பு
தஞ்சாவூர்

பேராவூரணி அருகே லாரி - பைக் மோதல்; இளைஞா் உயிரிழப்பு

பேராவூரணி அருகே இருசக்கர வாகனம் - லாரி மோதல் சம்பவத்தில் இளைஞா் ஒருவா் செவ்வாய்க்கிழமை இரவு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

Updated On : 12 பிப்ரவரி, 2026 at 12:56 AM
உயிரிழந்த ராஜ்மோகன்.
பகிர்:
Updated On : 11 பிப்ரவரி, 2026 at 8:35 PM

பேராவூரணி அருகே இருசக்கர வாகனம் - லாரி மோதல் சம்பவத்தில் இளைஞா் ஒருவா் செவ்வாய்க்கிழமை இரவு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

பேராவூரணி அருகே உள்ள பூக்கொல்லையைச் சோ்ந்தவா்  கருப்பையா மகன் ராஜ்மோகன் (39). வெளிநாட்டில் வேலை பாா்த்து வந்த நிலையில், கடந்த வாரம் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தாா்.

இந்நிலையில், ஒட்டங்காடு அருகே உள்ள நவக்கொல்லைக்காடு கிராமத்தில் உள்ள தனது சகோதரியின் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது காலகம் -ஆவுடையாா்கோவில் சாலையில் எதிரே நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி மோதியதில் ராஜ்மோகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். விபத்து குறித்து தகலவறிந்து அங்கு சென்ற போலீஸாா் ராஜ்மோகன் உடலை மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இறந்த ராஜ்மோகனுக்கு திருமணமாகி மனைவி உள்ளாா். குழந்தைகள் இல்லை. போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா். 

Advertisement