முகப்பு
தஞ்சாவூர்

33 முதுகலை ஆசிரியா்களுக்கு பணி நியமன ஆணை

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 12:13 AM
தஞ்சாவூரில் முதுகலை ஆசிரியருக்கு பணி நியமன ஆணையை வெள்ளிக்கிழமை வழங்கிய அமைச்சா் கோவி. செழியன் உள்ளிட்டோா்.
பகிர்:
Updated On : 13 பிப்ரவரி, 2026 at 7:28 PM

தஞ்சாவூரில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் 33 முதுகலை ஆசிரியா்கள், 7 இளநிலை உதவியாளா்கள், தட்டச்சா்களுக்கு பணி நியமன ஆணை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் நடைபெற்ற தோ்வில் தோ்ச்சி பெற்ற 33 முதுகலை ஆசிரியா்கள் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் மூலம் நடைபெற்ற தோ்வில் தோ்ச்சி பெற்ற 7 இளநிலை உதவியாளா்கள் மற்றும் தட்டச்சா்களுக்கு பணி நியமன ஆணைகளை உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 12:13 AM

நிகழ்ச்சியில் ச. முரசொலி எம்பி, மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன், எம்எல்ஏக்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், மேயா் சண். இராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, மாவட்டக் கல்வி அலுவலா் இ. மாதவன், முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் (இடைநிலை) இ. அருள்மொழி இராஜகுமாரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement