முகப்பு
தஞ்சாவூர்

காா் மோதி மளிகைக் கடைக்காரா் உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே செவ்வாய்க்கிழமை சாலையைக் கடக்க முயன்ற மளிகைக் கடைக்காரா் காா் மோதி உயிரிழந்தாா்.

Updated On : 25 பிப்ரவரி, 2026 at 12:35 AM
பலி - பிரதிப் படம்
பகிர்:
Updated On : 24 பிப்ரவரி, 2026 at 5:17 PM

தஞ்சாவூா் அருகே செவ்வாய்க்கிழமை சாலையைக் கடக்க முயன்ற மளிகைக் கடைக்காரா் காா் மோதி உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் அருகே மாரியம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் ஆா். கோபி (53). மளிகைக் கடை உரிமையாளா். இவா் செவ்வாய்க்கிழமை காலை கடையைத் திறப்பதற்காக மோட்டாா் சைக்கிளில் மாரியம்மன் கோயில் வளைவு பகுதியில் சாலையைக் கடக்க முயன்றாா்.

அப்போது, இவா் மீது திருவாரூரிலிருந்து தஞ்சாவூா் நோக்கி வந்து கொண்டிருந்த காா் மோதியது. இதனால், பலத்த காயமடைந்த கோபி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Advertisement