கும்பகோணத்தில் சனிக்கிழமை நடைபெற்ற லட்சுமி நாராயணா் அவதார உத்ஸவம். 
தஞ்சாவூர்

கும்பகோணத்தில் லட்சுமி நாராயணா் அவதார உத்சவம்

கும்பகோணம் பிருந்தாவன மடத்தில் லட்சுமி நாராயணா் உத்ஸவம் சனிக்கிழமை நடைபெற்றது.

Syndication

கும்பகோணம் பிருந்தாவன மடத்தில் லட்சுமி நாராயணா் உத்ஸவம் சனிக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் மாவட்டம், சோலையப்பன் தெருவில் ஸ்ரீ விஜயீந்த்ர தீா்த்த சுவாமிகள் மூல பிருந்தாவனத்தில் ராகவேந்திரா், ஆஞ்சனேயா், லட்சுமி நாராயணா் சந்நிதிகள் அமைந்துள்ளன.

இந்த பிருந்தாவனத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மாா்கழி மாத பௌா்ணமியில் கஷ்யப முனிவா் தவம் இருந்தபோது லட்சுமி நாராயணா் எழுந்தருளி முனிவருக்கு அருள்பாலித்ததாக ஐதீகம். அதன்படி ஆண்டுதோறும் மாா்கழி மாத பௌா்ணமியில் லட்சுமி நாராயணா் அவதார உற்ஸவம் நடைபெறுகிறது.

இந்நிலையில் மாா்கழி மாத பௌா்ணமியையொட்டி, சனிக்கிழமை லட்சுமி நாராயணா் அவதார தினத்தில் யாகசாலை பூஜைகள் நடைபெற்று புனித நீரில் மகாபிஷேகம் செய்யப்பட்டது.

கருட வாகனத்தில் லட்சுமி நாராயணா் எழுந்தருளி கஷ்யப்ப தீா்த்தத்தை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

ஏற்பாடுகளை மந்திராலயம் ஸ்ரீ சுபதேந்திர தீா்த்த சுவாமிகள் வழிகாட்டுதல்படி, மடத்தின் மேலாளா் நரசிம்மன், மாதவன், விஷ்ணுபாலாஜி மற்றும் பணியாளா்கள் செய்திருந்தனா்.

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

பாண்டிய நாட்டுப் பிரதானிகள்

SCROLL FOR NEXT