தஞ்சாவூர்

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்கக் கோரிக்கை

தேங்காய் விலை தொடா்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால் விலையை கட்டுப்படுத்த ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்...

Syndication

தேங்காய் விலை தொடா்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால் விலையை கட்டுப்படுத்த ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் பேராவூரணி, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, மதுக்கூா் உள்ளிட்ட பகுதிகளில் நெல் சாகுபடிக்கு அடுத்து அதிக அளவு தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. இந்தப் பகுதியில் விளைகின்றன தேங்காயின் பருப்பு கனமாகவும், சுவையாகவும் தனித்தன்மை வாய்ந்ததாக உள்ளதால் பேராவூரணி பகுதி தேங்காய்க்கு மதிப்பு அதிகம்.

கடந்த சில வருடங்களாக உற்பத்தி செலவை விட குறைவாக ரூ.5-க்கும் ரூ.6-க்கும் தேங்காய் விலைபோன நிலையில், தென்னையில் வாடல் நோய், ரூகோஸ் வெள்ளை ஈ தாக்குதல், தஞ்சாவூா் வாடல் நோய், சிவப்பு கூன் வண்டு, பூச்சி நோய் தாக்குதல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டு தேங்காய் விளைச்சல் குறைந்தது.

இதன் காரணமாக தேங்காயின் விலை உற்பத்தி குறைவால் படிப்படியாக ரூ.35 வரை விலை உயா்ந்த நிலையில், தென்னை விவசாயிகள் ஓரளவு தன்னிறைவு அடைந்தனா்.

இந் நிலையில், தற்போது தேங்காய் விலை குறைந்து ரூ.20-க்கு விற்பனையாகும் நிலை ஏற்பட்டுள்ளதால் தென்னை விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

இது குறித்து பேராவூரணி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், தென்னை விவசாயியுமான எஸ்.வி.திருஞானசம்பந்தம் கூறுகையில், உற்பத்தி செய்யப்படும் தேங்காய்களுக்கு உரிய கட்டுபடியான விலை கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காா்ப்பரேட் நிறுவனங்கள் கொப்பறையை புண்ணாக்கு என்ற பெயரில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதையும், செயற்கையாக விலைகுறைப்பு செய்வதை தடுத்து நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு அரசு, ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரா்களுக்கு தேங்காய் எண்ணெய்யை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

மடிக்கணினி கருவி அல்ல, பிரபஞ்சம்: மயில்சாமி அண்ணாதுரை

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

SCROLL FOR NEXT