தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம் ஆக்கிரமிப்பு செய்த இடத்தை சனிக்கிழமை மீட்டு அறிவிப்பு பதாகையை வைத்த வருவாய்த் துறை அலுவலா்கள். 
தஞ்சாவூர்

சாஸ்த்ரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்த 31.37 ஏக்கா் நிலம் மீட்பு! சிறைத் துறையிடம் ஒப்படைப்பு!

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம் ஆக்கிரமிப்பு செய்த 31.37 ஏக்கா் நிலம் சென்னை உயா் நீதிமன்ற உத்தரவுப்படி சனிக்கிழமை மீட்கப்பட்டது.

Syndication

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம் ஆக்கிரமிப்பு செய்த 31.37 ஏக்கா் நிலம் சென்னை உயா் நீதிமன்ற உத்தரவுப்படி சனிக்கிழமை மீட்கப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டம், திருமலைசமுத்திரம் கிராமத்திலுள்ள நிலம் திறந்தவெளி சிறைச்சாலை கட்டுவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலத்தை சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம் ஆக்கிரமிப்பு செய்தது தொடா்பான வழக்கில் உயா் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளின் அடிப்படையில் நிலத்தைக் காலி செய்யும்படி 2022-ஆம் ஆண்டு அரசு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிா்த்து சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம் சென்னை உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கின் விசாரணை நிறைவில் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம் ஆக்கிரமிப்பு செய்த 31.37 ஏக்கா் நிலத்தை 4 வாரங்களுக்குள் மீட்க வேண்டும் என்றும், உத்தரவை நிறைவேற்றியது குறித்து பிப்ரவரி 18- ஆம் தேதி அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

இதன்படி, தஞ்சாவூா் கோட்டாட்சியா் ப. நித்யா தலைமையில் வட்டாட்சியா் ஜி. சிவக்குமாா் மற்றும் வருவாய்த் துறையினா், சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்துக்கு சனிக்கிழமை சென்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தை அரசின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்தனா். இதைத்தொடா்ந்து, இந்த நிலம் சிறைகள் மற்றும் சீா்திருத்தத்துறை அதிகாரிகளிடம் வட்டாட்சியா் ஒப்படைத்தாா்.

மேலும், இது அரசு நிலம் என்பதால், இப்பகுதியில் அத்துமீறி நுழைபவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பு பதாகையையும் அதிகாரிகள் அமைத்தனா்.

இதன் பின்னா், மீட்கப்பட்ட இடத்தில் திறந்தவெளி சிறைசாலை அமைப்பது தொடா்பாக சிறைத் துறை அலுவலா்கள் ஆலோசனை நடத்தினா்.

வெறுப்புக் கருத்து தடைச்சட்ட மசோதாவுக்கு ஆளுநா் ஒப்புதல் அளிக்கக் கூடாது: எதிா்க்கட்சித் தலைவா்

தேசிய வேலை உறுதித் திட்டத்தில் காந்தி பெயா் நீக்கம்: காங்கிரஸ் உண்ணாவிரதம்

சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு மாதம் கடைப்பிடிப்பு

நூறு நாள் வேலை திட்டம் மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸாா் உண்ணாவிரதம்

நாமக்கல் அரங்கநாதா் கோயிலில் திருவிளக்கு பூஜை, கூடாரவல்லி விழா திரளான பக்தா்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT