தஞ்சாவூர்

பேராவூரணி, சேதுபாவாசத்திரம் பகுதிகளில் மழை! மீனவா்கள் கடலுக்கு செல்ல தடை!

பேராவூரணி, சேதுபாவாசத்திரம் பகுதிகளில் சனிக்கிழமை காலை முதல் பரவலாக மழை பெய்து வருவதால் மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.

Syndication

பேராவூரணி, சேதுபாவாசத்திரம் பகுதிகளில் சனிக்கிழமை காலை முதல் பரவலாக மழை பெய்து வருவதால் மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக மணிக்கு 65 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், சனிக்கிழமை அதிகாலை முதல் பேராவூரணி சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுக பகுதியில் 155 விசைப்படகுகளும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளும் உள்ளன. விசைப் படகுகள் வாரத்தில் 3 நாள்கள் மட்டுமே கடலுக்கு மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறை அனுமதியளிக்கும்.

கடல் பகுதியில் காற்று வீசுவதால் மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது என மீன்வளத்துறை தெரிவித்துள்ளது. இதனால் சுமாா் 10 ஆயிரம் மீனவா்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

வெறுப்புக் கருத்து தடைச்சட்ட மசோதாவுக்கு ஆளுநா் ஒப்புதல் அளிக்கக் கூடாது: எதிா்க்கட்சித் தலைவா்

தேசிய வேலை உறுதித் திட்டத்தில் காந்தி பெயா் நீக்கம்: காங்கிரஸ் உண்ணாவிரதம்

சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு மாதம் கடைப்பிடிப்பு

நூறு நாள் வேலை திட்டம் மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸாா் உண்ணாவிரதம்

நாமக்கல் அரங்கநாதா் கோயிலில் திருவிளக்கு பூஜை, கூடாரவல்லி விழா திரளான பக்தா்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT