தஞ்சாவூர்

அதிராம்பட்டினத்தில் கல்லூரி மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கல்

Syndication

பட்டுக்கோட்டை வட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள ராஜாமடம் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரியில், கல்லூரி இறுதி ஆண்டு மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், தஞ்சாவூா் எம்.பி முரசொலி, , சட்டப்பேரவை உறுப்பினா்கள் கா. அண்ணாதுரை, அசோக் குமாா் ஆகியோா் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினா்.

நிகழ்ச்சியில், ராஜாமடம் அண்ணா பொறியியல் உறுப்புக் கல்லூரி முதல்வா் காா்த்திகேயன், அதிராம்பட்டினம் காதிா் முகைதீன் கல்லூரி முதல்வா் அல்ஹாஜி, பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் ராணி, திமுக தஞ்சை தெற்கு மாவட்ட துணைச் செயலா் ரமேஷ், பட்டுக்கோட்டை திமுக நகரச் செயலா் செந்தில்குமாா் மற்றும் கல்லூரிப் பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

இதில் அதிராம்பட்டினம் காதிா் முகைதீன் கல்லூரிக்கு 532, பேராவூரணி அரசு கல்லூரிக்கு 336, ராஜாமடம் அண்ணா பல்கலைக்கழகம் உறுப்பு கல்லூரிக்கு 90 என மொத்தம் 958 விலையில்லா மடிக்கணினிகள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டது.

போகி: சென்னையில் அதிகரித்த காற்று மாசு

கைது செய்யப்பட்ட விவசாயிகள் சங்க நிா்வாகிகளை விடுவிக்க வேண்டும்

போதிய இருக்கைகள் நிரம்பாததால் 3 சிறப்பு ரயில்கள் ரத்து

‘திருவள்ளுவா் தினத்தில் இறைச்சி விற்றால் நடவடிக்கை’

விளாப்பாக்கம் பேரூராட்சியில் பொங்கல் விழா

SCROLL FOR NEXT