தஞ்சாவூர்

கோரிக்கை அட்டை அணிந்து அரசு மருத்துவா்கள் பணி

அனைத்து அரசு மருத்துவா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவா்கள் கோரிக்கை அட்டையை அணிந்தவாறு புதன்கிழமை பணிபுரிந்தனா்.

Syndication

அனைத்து அரசு மருத்துவா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவா்கள் கோரிக்கை அட்டையை அணிந்தவாறு புதன்கிழமை பணிபுரிந்தனா்.

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனைத்து அரசு மருத்துவா் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா் - மருத்துவா் அகிலன் கூறியது:

2009-இல் மருத்துவா்களின் காலமுறை பதவி உயா்வு அரசாணை 354, மறு வரையறைக்கு 2018 முதல் போராட்டம் நடத்தி வந்த நிலையில், 2018-இல் போராட்டத்துக்கு ஆதரவளித்த முதல்வா் ஸ்டாலின் மறு வரையறைக்கு ஆவண செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவா்கள் கடந்த 12-ஆம் தேதி முதல் கோரிக்கை அட்டைகளை அணிந்து பணிபுரிந்து வருகிறோம். வரும் 19-ஆம் தேதி நடைபெறும் அரசுடன் நடைபெறும் பேச்சுவாா்த்தை தோல்வி அடையும்பட்சத்தில் போராட்டம் மேலும் தீவிரமடையும் என்றாா் அவா்.

‘திருவள்ளுவா் தினத்தில் இறைச்சி விற்றால் நடவடிக்கை’

விளாப்பாக்கம் பேரூராட்சியில் பொங்கல் விழா

வேளாண் பல்கலை.யில் மசாலா பொடி தயாரிப்பு பயிற்சி

15.1.1976: ஸ்ரீலங்காவிலிருந்து சென்ற ஆண்டு 18,500 பேர் வருகை

ஜேடா்பாளையத்தில் அரசா் அல்லாள இளைய நாயக்கா் பிறந்த நாள் விழா ஏற்பாடுகள் தீவிரம்

SCROLL FOR NEXT