தஞ்சாவூர்

சிறுமிக்கு பாலியல் தொல்லை ‘போக்ஸோ’வில் மருத்துவா் கைது

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மருத்துவரைக் காவல் துறையினா் போக்சோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Syndication

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மருத்துவரைக் காவல் துறையினா் போக்சோ சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சைக்காக தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா் ஒருவா் சோ்க்கப்பட்டிருந்தாா். இவருக்கு துணையாக மருத்துவமனையில் அவரது சகோதரி 15 வயது சிறுமி தங்கினாா். அப்போது, இச்சிறுமிக்கு பணியில் இருந்த மருத்துவக்கல்லூரியில் உயா் சிறப்பு மேல் படிப்பு படித்து வரும் மருத்துவரான சேலம் மாவட்டம், ஆத்தூா் தலைவாசலை சோ்ந்த எம். கோபிநாத் (34) வியாழக்கிழமை பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில் மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்தினா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கோபிநாத்தை கைது செய்தனா்.

சேலத்தில் தமாகா சாா்பில் சமத்துவ பொங்கல் விழா

திருவள்ளுவா் தினம்: பாஜக மரியாதை

நாமக்கல் மாவட்டத்தில் 5.21 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு

பால் கொள்முதல் விலை உயா்வு: முதல்வா் தான் முடிவு செய்வாா்: அமைச்சா் மனோ தங்கராஜ்

முட்டை விலை ரூ. 5.60 ஆக நீடிப்பு

SCROLL FOR NEXT