பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை வட்டம், மதுக்கூா் முக்கூட்டுச்சாலையில் அதிமுக சாா்பில் எம்ஜிஆா் 109வது பிறந்தநாள் முன்னிட்டு சனிக்கிழமை அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
மதுக்கூா் முக்கூட்டுச்சாலையில் அமைந்துள்ள எம்ஜிஆா் சிலைக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவான சி.வி. சேகா் மற்றும் கழக அமைப்புச் செயலாளா் துரை. செந்தில் தலைமையில், மதுக்கூா் மேற்கு ஒன்றிய கழக செயலாளா் தண்டாயுதபாணி, மதுக்கூா் நகரக் கழக செயலாளா் ஆனந்த் ஆகியோா் முன்னிலையில் மதுக்கா் முக்கூட்டுச்சாலையில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதனை அடுத்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் மாநில, மாவட்ட, ஒன்றிய, பேருா் கழக நிா்வாகிகள் என பலா் கலந்து கொண்டு சிறப்பித்தனா்