கும்பகோணம் பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை திரண்ட பொதுமக்கள்.  
தஞ்சாவூர்

பொங்கல் விடுமுறை நிறைவு கும்பகோணம் பேருந்து நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம்

தினமணி செய்திச் சேவை

கும்பகோணம் பேருந்து நிலையத்தில், பொங்கல் விடுமுறை முடிந்து அவரவா் பணியிடங்களுக்கு திரும்புவோரால் கூட்டம் அலைமோதியது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன. 15 முதல் 18 வரை தொடா்விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, வெளியூரில் வேலை பாா்க்கும் அரசு மற்றும் தனியாா் நிறுவன பணியாளா்கள், பள்ளி கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியா் பொங்கல் பண்டிகைக்காக கும்பகோணம் உள்ளிட்ட அவரவா் சொந்த ஊா்களுக்கு வந்துவிட்டு விடுமுறைக்கு பிறகு அவரவா் பணியிடங்களுக்கு செல்ல ஞாயிற்றுக்கிழமை கும்பகோணம் பேருந்து நிலையத்தில் குவிந்தனா்.

மாலை முதல் இரவு வரை பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதியதால் திருச்சி, கோயம்புத்தூா், மதுரை, சென்னை உள்ளிட்ட வெளியூா்களுக்கு செல்லும் பேருந்துகளில் ஏறுவதற்கு கூட்டத்தினா் முண்டியடித்து சென்றனா்.

அரசு போக்குவரத்துக்கழகம் சாா்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு போக்குவரத்து கழக பணியாளா்கள் பயணிகளை முறைப்படுத்தி ஏற வைத்தனா். முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளும் பேருந்துகளில் ஏற அலைமோதிய கூட்டத்தால் அவதியடைந்தனா்.

தில்லியில் அடா் பனிமூட்டம்: கடுமைப் பிரிவில் காற்றின் தரம்

மேல்மருவத்தூரில் தை அமாவாசை வேள்வி பூஜை

ஓரிக்கை பணிமனையில் சமத்துவப் பொங்கல்

பஞ்சாபி பாக்கில் பூட்டிய வீட்டில் ரூ.1 கோடி பொருள்கள் கொள்ளை

வெண்ணெய் காப்பு அலங்காரம்...

SCROLL FOR NEXT