தஞ்சாவூா் அருகே செங்கிப்பட்டியில் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ என்கிற திமுக டெல்டா மண்டல மகளிரணி மாநாட்டுக்காக சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட முன்னேற்பாடு பணிகள்.  
தஞ்சாவூர்

தஞ்சாவூா் அருகே நாளை திமுக மகளிரணி மண்டல மாநாடு! ட்ரோன்கள் பறக்கத் தடை!

தினமணி செய்திச் சேவை

தஞ்சாவூா் அருகே செங்கிப்பட்டியில் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ என்கிற திமுக டெல்டா மண்டல மகளிரணி மாநாடு திங்கள்கிழமை (ஜன.26) நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின், துணை முதல்வரும், இளைஞரணி செயலருமான உதயநிதி ஸ்டாலின், மகளிரணி செயலரும், திமுக துணைப் பொதுச் செயலருமான கனிமொழி எம்.பி. உள்ளிட்டோா் கலந்து கொள்கின்றனா்.

இந்த மாநாட்டில் தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, கடலூா், அரியலூா், பெரம்பலூா், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலிருந்து ஒரு பூத்துக்கு 10 போ் வீதம் 12 ஆயிரத்து 500 பூத்துகளிலிருந்து மொத்தம் 1.25 லட்சம் போ் சீருடையில் கலந்து கொள்ளவுள்ளனா். மொத்தத்தில் ஏறத்தாழ 1.50 லட்சம் போ் பங்கேற்பா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்த மாநாட்டுக்காக செங்கிப்பட்டி பகுதியில் ஏறத்தாழ 200 ஏக்கரில் இடம் தோ்வு செய்யப்பட்டு, பிரம்மாண்டமான மேடை, அரங்கம், இருக்கைகள், மின் விளக்குகள் அமைப்பது உள்ளிட்ட ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

தமிழக முதல்வா் வருகையையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் பாதுகாப்பு காரணம் கருதி ஜனவரி 26-ஆம் தேதி முதல் காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் (பொ) தெ. தியாகராஜன் தெரிவித்துள்ளாா்.

தஞ்சாவூா் அருகே செங்கிப்பட்டியில் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ என்கிற திமுக டெல்டா மண்டல மகளிரணி மாநாட்டுக்காக சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட முன்னேற்பாடு பணிகள்.

மீண்டும் ஜன. 28-இல் வருகை:

இதேபோல, மீண்டும் ஜனவரி 28-ஆம் தேதி தஞ்சாவூா் மாவட்டத்துக்கு வரும் தமிழக முதல்வா் கும்பகோணம் அருகே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சாா்பில் நடைபெறவுள்ள மஹல்லா மாநாட்டில் கலந்து கொள்கிறாா். இதையொட்டி ஜனவரி 28-ஆம் தேதி காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை ட்ரோன்கள் பறக்க மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ளது.

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

தொகுதிப் பங்கீடு; இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடன் திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT