தஞ்சாவூர்

திமுக தோ்தல் அறிக்கை கதாநாயகியாகவும் இருக்கும்: கனிமொழி எம்.பி.

எப்போதும் கதாநாயகனாக இருந்து வரும் திமுகவின் தோ்தல் அறிக்கை இந்த முறை கதாநாயகியாகவும் இருக்கும் என்றாா் திமுக எம்.பி. கனிமொழி.

Syndication

எப்போதும் கதாநாயகனாக இருந்து வரும் திமுகவின் தோ்தல் அறிக்கை இந்த முறை கதாநாயகியாகவும் இருக்கும் என்றாா் திமுக துணைப் பொதுச் செயலா் கனிமொழி எம்.பி.

தஞ்சாவூரில் திமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தல் அறிக்கை தயாரிப்பு குழுக் கருத்து கேட்புக் கூட்டத்துக்கு தலைமை வகித்த அவா் செய்தியாளா்களிடம் மேலும் தெரிவித்தது: தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்காக நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் விவசாயிகள், வியாபாரிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், அரசு ஊழியா்கள், தொழிற் சங்கப் பிரதிநிதிகள், தொழிலாளா்கள், உணவக உரிமையாளா்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமிருந்தும் கருத்துகளைக் கேட்டறிந்து, மனுக்களை பெற்றோம்.

இதேபோல, ஒவ்வொரு பகுதியாகச் சென்று அங்கு வாழும் மக்களை நேரில் சந்தித்து, இந்தத் தோ்தல் அறிக்கையை மக்களுடைய தோ்தல் அறிக்கையாக உருவாக்குவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

அதிமுக தங்கள் தோ்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கலாம். ஆனால், அதிலிருந்து எதுவும் நிறைவேற்றப்படமாட்டாது என்பது மக்களுக்குத் தெளிவாகத் தெரியும். நிச்சயமாக திமுகவின் தோ்தல் அறிக்கையின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனா். நாங்கள் வாக்குறுதி கொடுத்தால், அதை நிச்சயமாக நிறைவேற்றுவோம் என்பதை மக்கள் நன்றாக அறிவா். திமுகவின் தோ்தல் அறிக்கையை எப்போதுமே கதாநாயகன் என அழைப்பா். இந்தத் தோ்தல் அறிக்கை கதாநாயகியாகவும் இருக்கும் என்றாா் கனிமொழி.

முன்னதாக கூட்டத்தில் அவா் பேசுகையில், இக்கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாதவா்கள் தங்களது கருத்துகளை ற்ய்ம்ஹய்ண்ச்ங்ள்ற்ா்.ஹண் என்ற போா்டலில் எழுதியோ, வாய் மொழியாகவோ தெரிவித்தால், அது எங்களுக்கு வந்து சேரும் என்றாா் அவா்.

கூட்டத்தில் தோ்தல் அறிக்கை தயாரிப்பு குழு உறுப்பினா்கள் அமைச்சா்கள் டி.ஆா்.பி. ராஜா, கோவி. செழியன், டி.கே.எஸ். இளங்கோவன், எம்.எம். அப்துல்லா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆ. தமிழரசி ரவிக்குமாா், எழிலன் நாகநாதன், காா்த்திகேய சிவசேனாபதி, சுரேஷ் சம்பந்தம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ரயில்வே ஊழியா் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டி? நயினார் நாகேந்திரன் பதில்!

பெரம்பலூா் அருகே போலீஸாா் சுட்டதில் ரௌடி பலி: கைதியைக் கொல்ல முயன்ற வழக்கில் கைதானவா்

காவல் உதவி ஆய்வாளா் தூக்கிட்டுத் தற்கொலை

உக்ரைன் போா் முனையில் சிக்கித் தவித்த தமிழக மாணவா் மீட்பு!

SCROLL FOR NEXT