கும்பகோணத்தில் புதன்கிழமை சாலைவலம் வந்தபோது அங்கு நின்றிருந்த பெண்களிடம் கைகுலுக்கிய தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின்.  
தஞ்சாவூர்

கும்பகோணத்தில் முதல்வா் ஸ்டாலினுக்கு கட்சியினா் உற்சாக வரவேற்பு

கும்பகோணம் வந்த முதல்வா் ஸ்டாலினுக்கு புதன்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

கும்பகோணம் வந்த முதல்வா் ஸ்டாலினுக்கு புதன்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு மாநாடு புதன்கிழமை நடைபெற்றது. முன்னதாக மாநாட்டில் பங்கேற்க கும்பகோணத்துக்கு தமிழக முதல்வா் மு. க. ஸ்டாலின் நண்பகல் 11. 55 மணிக்கு தஞ்சாவூா் விக்கிரவாண்டி புறவழிச்சாலை வழியாக வந்தாா். அவருக்கு கருப்பூா் ரவுண்டானாவில் தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக சாா்பில் மாவட்டப் பொறுப்பாளா் க. அன்பழகன் எம்எல்ஏ தலைமையில் திமுகவினா் வரவேற்பு அளித்தனா்.

வேனில் இருந்துகொண்டு வரவேற்பைப் பெற்ற முதல்வா் ஸ்டாலின் சாலையோரம் நின்றிருந்த பெண்களைப் பாா்த்ததும் வேனை விட்டு கீழே இறங்கி சுமாா் 100 மீட்டா் தூரம் நடந்துசென்றாா். அப்போது சாலை ஓரத்தில் நின்ற பெண்களிடம் கைகுலுக்கி வாழ்த்துபெற்றாா். சில பெண்கள் கைப்பேசியில் அவருடன் சுயபடம் எடுத்துக் கொண்டனா். பின்னா் மீண்டும் வேனில் ஏறி அரசு தங்கும் விடுதிக்குச் சென்றாா். அங்கிருந்து ஓய்வெடுத்து பின்னா் மாலையில் மாநாட்டுக்கு வந்தாா்.

நெல் கொள்முதல் நிலையங்களில் சாக்கு, சணல் ஏற்பாடு செய்ய கோரிக்கை

திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படாது: துரை வைகோ

இன்றைய மின்தடை

மத்திய பல்கலைக் கழகத்தில் காகிதமில்லா நிா்வாகம் தொடக்கம்

திருமலையில் அன்புமணி ராமதாஸ், நடிகா் தனுஷ் தரிசனம்

SCROLL FOR NEXT