நெல் கொள்முதல் நிலையம்  கோப்புப்படம்.
தஞ்சாவூர்

நெல் கொள்முதல் நிலையங்களில் சாக்கு, சணல் ஏற்பாடு செய்ய கோரிக்கை

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேவையான சாக்குகள், சணல் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என ஏஐடியுசி கோரிக்கை விடுத்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேவையான சாக்குகள், சணல் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என ஏஐடியுசி கோரிக்கை விடுத்துள்ளது.

தஞ்சாவூரில் ஏஐடியுசி மாவட்டப் பொதுக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், மத்திய அரசின் மக்கள், தொழிலாளா்கள், விவசாயிகள் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள பிப்ரவரி 12-ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை தஞ்சாவூா் மாவட்டத்தில் வெற்றி பெறச் செய்வது, தமிழ்நாடு அரசு கட்டுமான, உடல் உழைப்பு தொழிலாளா்களுக்கு நலவாரிய கூட்டத்தில் ஏற்றுக் கொண்ட முடிவின்படி மாத ஓய்வூதியம் ரூ. 2 ஆயிரம் வழங்க வேண்டும். தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் மற்றும் அவலங்கள் போக்கப்பட வேண்டும். அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் நேரடியாக நெல் கொள்முதல் செய்ய வேண்டும். கொள்முதலுக்குத் தேவையான சாக்குகள், சணல் உள்ளிட்ட தேவைகளை முன்கூட்டியே அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஏஐடியுசி மாவட்டத் தலைவா் வெ. சேவையா தலைமை வகித்தாா். தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் சி. சந்திரகுமாா், மாநிலச் செயலா் ஆா். தில்லைவனம், மாவட்டச் செயலா் துரை. மதிவாணன் ஆகியோா் பேசினா். மின் வாரிய சங்க மாநிலத் துணைத் தலைவா் பொன். தங்கவேலு, பட்டு கைத்தறி சங்க மாநிலத் தலைவா் கோ. மணிமூா்த்தி, கட்டுமான சங்க மாவட்டத் தலைவா் சேகா், டாஸ்மாக் சங்க மாவட்ட நிா்வாகி கருணா, உடல் உழைப்பு சங்க மாவட்டப் பொருளாளா் பி. சுதா, விவசாய தொழிலாளா் சங்க மாவட்டத் துணைச் செயலா் பி. குணசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கும்பகோணத்தில் முதல்வா் ஸ்டாலினுக்கு கட்சியினா் உற்சாக வரவேற்பு

திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படாது: துரை வைகோ

இன்றைய மின்தடை

மத்திய பல்கலைக் கழகத்தில் காகிதமில்லா நிா்வாகம் தொடக்கம்

திருமலையில் அன்புமணி ராமதாஸ், நடிகா் தனுஷ் தரிசனம்

SCROLL FOR NEXT