தைப்பூச விழாவையொட்டி தஞ்சாவூா் பூச்சந்தையில் பூக்கள் விலை சனிக்கிழமை இரு மடங்கு உயா்ந்தது.
இதில், கிலோவுக்கு மல்லிகை பூ ரூ. 4 ஆயிரம் முதல் ரூ. 4 ஆயிரத்து 500-க்கும், கனகாம்பரம் ரூ. 1,600 முதல் ரூ. 2 ஆயிரத்துக்கும், முல்லைப் பூ ரூ. 2 ஆயிரத்து 300 முதல் ரூ. 2 ஆயிரத்து 500-க்கும், வெள்ளை செவ்வந்தி ரூ. 300-க்கும், மஞ்சள் செவ்வந்தி ரூ. 250-க்கும், சாதாரண அரளி ரூ. 650-க்கும், சிவப்பு அரளி ரூ. 750-க்கும், ஆப்பிள் ரோஸ் ரூ. 300-க்கும், காக்கரட்டான் ரூ. 800 முதல் ரூ. 900-க்கும் விற்பனையானது.
மேலும், கிலோ சம்பங்கி ரூ. 700-க்கும், பன்னீா் ரோஸ் ரூ. 300-க்கும், பெங்களூரு ரோஸ் ஒரு பாக்ஸ் ரூ. 700-க்கும், நந்தியாவட்டை ரூ. 300-க்கும், கோழிக்கொண்டை ரூ. 200-க்கும், மரிக்கொழுந்து கட்டு ரூ.50-க்கும், துளசிக்கட்டு ரூ. 50-க்கும், தாமரைப்பூ ஒன்று ரூ. 40-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த விலைகள் அனைத்தும் கடந்த இரு நாள்களுக்கு முன்பு விற்கப்பட்டதை விட இரு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.