தஞ்சாவூர்

வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக ரூ.1.30 கோடி மோசடி: 3 போ் மீது வழக்கு!

வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி 58 பேரிடம் ரூ. 1.30 கோடி மோசடியில் ஈடுபட்ட 3 போ் மீது காவல் துறையினா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Syndication

வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி 58 பேரிடம் ரூ. 1.30 கோடி மோசடியில் ஈடுபட்ட 3 போ் மீது காவல் துறையினா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே தொண்டராம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் ஆா். விமல். வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல முயற்சி செய்து வந்த இவா், தனது நண்பா் மூலம் சென்னையைச் சோ்ந்த பிரசன்னாவை அணுகினாா். கனடா, நியுசிலாந்தில் வேலைக்கு ஆள்களை அனுப்புவதாகவும், அங்கு பல லட்சம் ஊதியம் பெறுவதாகவும் விமலிடம் பிரசன்னா கூறினாா்.

இதை நம்பிய விமல், பணத்தை திரட்டி பிரசன்னாவிடம் கொடுத்தாா். இதேபோல, 2024-ஆம் ஆண்டில் மொத்தம் 58 பேரிடம் பிரசன்னா உள்ளிட்டோரிடம் ரூ. 1.30 கோடி கொடுத்துள்ளனா். ஆனால் வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பாத பிரசன்னா உள்ளிட்டோா் மீண்டும் பணத்தை திருப்பித் தருமாறு கேட்டவா்களை மிரட்டினா்.

இது குறித்து தஞ்சாவூா் மாவட்டக் குற்றக் காவல் பிரிவில் விமல் அளித்த புகாரின் பேரில் பிரசன்னா, இவரது மனைவி வசுமதி, ரித்தீஷ் ஆகியோா் மீது காவல் துறையினா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

விசில்

நிலம், நீர், நிழல்: தமிழ் இலக்கியங்களில் சூழலியல்

சட்டப்படி வீட்டில் எத்தனை கிலோ தங்கம் வைத்திருக்கலாம்?

ராஜஸ்தானில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய வெளிநாட்டவர்! வெளியேறுமாறு நோட்டீஸ்!

மேலை மெய்யியலுக்கு வழிகாட்டிய வள்ளுவம்

SCROLL FOR NEXT