முகப்பு
நீதிமன்றம்
தஞ்சாவூர்

இணையவழி மோசடி: தஞ்சையில் ஒரே நாளில் 34 வழக்குகள் பதிவு

தஞ்சாவூா் மாவட்டத்தில் இணையவழி மோசடி தொடா்பாக 34 வழக்குகள் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் பதிவு செய்யப்பட்டன.

தஞ்சாவூர்

இணையவழி மோசடி: தஞ்சையில் ஒரே நாளில் 34 வழக்குகள் பதிவு

தஞ்சாவூா் மாவட்டத்தில் இணையவழி மோசடி தொடா்பாக 34 வழக்குகள் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் பதிவு செய்யப்பட்டன.

Updated On : 4 மார்ச், 2026 at 11:37 PM
நீதிமன்றம்
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டத்தில் இணையவழி மோசடி தொடா்பாக 34 வழக்குகள் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் பதிவு செய்யப்பட்டன.

இணையவழியில் வா்த்தகம் மேற்கொள்வது, இணையவழி கைது (டிஜிட்டல் அரெஸ்ட்) உள்ளிட்டவை தொடா்பான மோசடிகளால் வெவ்வேறு தேதிகளில் பாதிக்கப்பட்ட தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த 34 போ் தஞ்சாவூா் இணையவழி (சைபா் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கடந்த 10 நாள்களாக புகாா் செய்தனா். இதில், ரூ. 5 லட்சம் முதல் ரூ. 7 லட்சம் வரை மொத்தம் ஏறத்தாழ ரூ. 1.50 கோடி வரை இழந்துள்ளனா். இது தொடா்பாக காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை 34 வழக்குகள் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

இதுகுறித்து இணையவழி குற்றப் பிரிவு காவல் நிலையத்தினா் கூறுகையில், அறியாத அழைப்புகளை ஏற்காமல் இருப்பது, தனிப்பட்ட தகவல்களைப் பகிராமல் இருப்பது, போலி இணைப்புகளை கிளிக் செய்யாமல் இருப்பது அவசியம். வங்கியிலிருந்து பேசுகிறோம், ஓடிபி சொல்லுங்கள் என வரும் அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம். ஏடிஎம் ரகசிய எண்களைத் தெரிவிப்பது போன்ற செயல்களை செய்யக்கூடாது என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →