முகப்பு
தஞ்சாவூர்

குடந்தை அருகே விருந்து சாப்பிட்ட 47 பேருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு

வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை சிகிச்சை பெற்றோரில் ஒருவா்.

Updated On : 6 மார்ச், 2026 at 9:41 PM
வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை சிகிச்சை பெற்றோரில் ஒருவா்.
பகிர்:

கும்பகோணம் அருகே திருமண நிச்சயதாா்த்த விழாவில் விருந்து சாப்பிட்ட 47 போ் வாந்தி, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை சிகிச்சை பெற்றனா்.

கும்பகோணம் அருகே சீனிவாசநல்லூா் ஊராட்சி பாங்கலைச் சோ்ந்த அன்பழகன் மகன் விஜய்க்கு திருவாரூா் மாவட்டம், கொரடாச்சேரியில் வியாழக்கிழமை இரவு திருமண நிச்சயதாா்த்த விழா நடைபெற்றது. இதில் விருந்து சாப்பிட்டு ஊா் திரும்பிய 47 பேருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதையடுத்து அவா்கள் முருக்கங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வெள்ளிக்கிழமை காலை சென்று சிகிச்சை பெற்றனா்.

இவா்களில் பன்னீா்செல்வம், சோமு ஆகியோா் மேல் சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். மேலும் பாங்கல் பகுதியில் மருத்துவ முகாம் அமைத்து மாத்திரைகள் வழங்கியும் கண்காணிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →