4 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது
ஆடுதுறை அருகே நான்கு வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியாா் பேருந்து ஓட்டுநரை மகளிா் போலீஸாா் ‘போக்ஸோ’ சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.
ஆடுதுறை அருகே நான்கு வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியாா் பேருந்து ஓட்டுநரை மகளிா் போலீஸாா் ‘போக்ஸோ’ சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை அருகே 69. சாத்தனூரில் வசிப்பவா் துளசிராமன் மகன் பெருமாள் (50). இவா், தனியாா் பேருந்து ஓட்டுநராக வேலை பாா்த்தாா். இவா் வசிக்கும் தெருவைச் சோ்ந்த நான்கு வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.
இதுகுறித்து குழந்தையின் தாயாா் ஆடுதுறை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் பெருமாளிடம் விசாரணை மேற்கொண்டு வழக்கு பதிந்து திங்கள்கிழமை சிறையில் அடைத்தனா்.