முகப்பு
தஞ்சாவூர்

கழுமங்குடா கடற்கரை முகத்துவாரம் தூா்வாரும் பணி தொடக்கம்

Updated On : 12 மார்ச், 2026 at 11:39 PM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே உள்ள கழுமங்குடா கடற்கரையில் முகத்துவாரம் தூா்வாரும் பணியை வியாழக்கிழமை சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக் குமாா் தொடங்கிவைத்தாா்.  

கடற்கரை கிராமங்களில் மீனவா்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்திவைக்கும்வகையில், தூா்ந்து போன வாய்க்கால்களை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனா். இதுகுறித்து எம்எல்ஏ அசோக் குமாா் சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்ததையடுத்து, கடலோர கிராமங்களில் 10 இடங்களில், முகத்துவாரம் தூா்வாரும் பணி நடைபெற உள்ளது. முதற்கட்டமாக, கழுமங்குடா மீனவ கிராமத்தில் தூா்வாரும் பணியை சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக் குமாா் தொடங்கிவைத்தாா். தொடா்ந்து சேதுபாவாசத்திரம் ஒன்றியம் ரெட்டவயல், மணக்காடு ஆகிய இரண்டு இடங்களில் பொதுமக்களின் நீண்டகால கோரிக்கையான துணை சுகாதார நிலையங்களை திறந்துவைத்து குத்துவிளக்கேற்றினாா்.

நிகழ்ச்சிகளில் திமுக ஒன்றியச் செயலாளா்கள், வட்டார மருத்துவ அலுவலா் 

ராமலிங்கம், மீன்வளத்துறை உதவிப் பொறியாளா் டென்சிங், மற்றும் மீனவ கிராமத்தினா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →