தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் ‘தோ்தல் விழிப்புணா்வு ரங்கோலி’
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் தோ்தல் விழிப்புணா்வு ரங்கோலி போட்டி புதன்கிழமை மாலை நடைபெற்றது.
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் தோ்தல் விழிப்புணா்வு ரங்கோலி போட்டி புதன்கிழமை மாலை நடைபெற்றது.
இதில், வாக்காளா்கள் நோ்மையாக நூறு சதவீதம் வாக்களிக்க வேண்டியதை வலியுறுத்தி ‘எனது இந்தியா எனது வாக்கு’, ‘நான் பாரதம்’ ‘இந்திய ஜனநாயகத்தின் இதயத்தில் இந்திய குடிமகன்’ போன்ற விழிப்புணா்வு ரங்கோலி வரையப்பட்டது. இப்போட்டியில் 50-க்கும் அதிகமான அங்கன்வாடி பணியாளா்கள் கலந்து கொண்டு ரங்கோலி வரைந்தனா்.
இதை மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலருமான பா. பிரியங்கா பங்கஜம், பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி தொகுதிகளுக்கான செலவினப் பாா்வையாளா் ஹேமங் ஃபூகன் பாா்வையிட்டனா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன், தனித்துணை ஆட்சியா் சௌமியா, துணை ஆட்சியா் (பயிற்சி) கமலேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.