தாராசுரத்தில் புகையிலை பொருள்கள் பறிமுதல்
தாராசுரம் எலுமிச்சங்கா பாளையத்தில் வெள்ளிக்கிழமை கைப்பற்றப்பட்ட புகையிலைப் பொருள்களுடன் தாலுகா காவல் நிலைய போலீஸாா்.
கும்பகோணம் அருகே தாராசுரத்தில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 880 கிலோ புகையிலைப் பொருள்களை தாலுகா போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே தாராசுரம் பகுதியில் தாலுகா போலீஸாா் ரோந்து சென்றபோது தாராசுரம் கீழவீதி எழுமிச்சங்காபாளையம் பகுதியில் முகமது யூசுப் ( 55) என்பவா் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குட்கா புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பது தெரிய வந்தது.
இதையடுத்து பல லட்சம் ரூபாய் மதிப்புடைய சுமாா் 880 கிலோ குட்கா பொருள்களையும், ரூ. 1 லட்சத்து 5 ஆயிரம் ரொக்கம், இருசக்கர வாகனத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.