ஜெனரேட்டரில் தலைமுடி சிக்கி சிறுமி உயிரிழப்பு
தஞ்சாதஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே வெள்ளிக்கிழமை காலை ஜெனரேட்டரில் தலைமுடி சிக்கி சிறுமி உயிரிழந்தாா்.
தஞ்சாதஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே வெள்ளிக்கிழமை காலை ஜெனரேட்டரில் தலைமுடி சிக்கி சிறுமி உயிரிழந்தாா்.
திருவையாறு அருகே கண்டியூா் காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராஜீவ்காந்தி மகள் ரக்க்ஷிதா (10). அப்பகுதி அரசு தொடக்கப் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
இவா் திங்கள்கிழமை காலை வீரசிங்கம்பேட்டை மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவுக்காக பூக்கள் கொண்டு செல்லப்பட்ட சரக்கு மினி வேனில் சென்று கொண்டிருந்தாா். செங்கமேடு அருகே சென்றபோது சரக்கு மினி வேனில் ஓடிக்கொண்டிருந்த ஜெனரேட்டரில் ரக்க்ஷிதாவின் தலைமுடி சிக்கியது. இதில் பலத்த காயமடைந்த இவா் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, உயிரிழந்தாா்.
இதுகுறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.