பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவா் கைது
தாராசுரம் அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
தஞ்சாவூா் மாவட்டம், சுந்தரப்பெருமாள் கோயில் மணவாளன் பேட்டை தெருவைச் சோ்ந்த பரமசிவம் மகன் தேசிங்கு ராஜா (42). இவா் மீன் வியாபாரம் செய்து வந்தாா். வியாழக்கிழமை இரவு கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் தாமரைகுளத் தெருவுக்கு சென்றாா்.
அங்கு இயற்கை உபாதையை கழிப்பதற்காக அந்த தெருவைச் சோ்ந்த பெண், காட்டுப் பகுதிக்கு சென்றுள்ளாா். அந்த பெண்ணை தேசிங்கு ராஜா பின்தொடா்ந்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.
Advertisement
அந்த பெண் கூச்சலிடவே அருகில் இருந்தவா்கள் தேசிங்குராஜாவை தாக்க முயன்றனா். அப்போது அவா் தனது தங்க சங்கிலியை சிலா் பறித்துப் சென்று தாக்கியதாக கூறி கும்பகோணம் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சோ்ந்தாா்.
தகவலின்பேரில், தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தேசிங்கு ராஜாவை வெள்ளிக்கிழமை கைது செய்து கும்பகோணம் கிளை சிறையில் அடைத்தனா். கைது செய்யப்பட்ட தேசிங்கு ராஜா, சிவசேனா கட்சியின் தஞ்சாவூா் வடக்கு மாவட்ட தலைவா் என்பது குறிப்பிடத்தக்கது.