முகப்பு
தஞ்சாவூர்

இடஒதுக்கீட்டில் கல்லூரி சோ்க்கை: முன்னாள் படைவீரா்களை சாா்ந்தோா் சான்று பெறும் வழிமுறைகள் அறிவிப்பு

தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள முன்னாள் படைவீரா்களை சாா்ந்தோா்களின் சிறாா்கள், ‘சாா்ந்தோா் சான்று’ பெறுவதற்கான வழிமுறைகளை மாவட்ட ஆட்சியா் பா.பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளாா்.

Updated On : 14 மே 2026, 12:30 am IST
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள முன்னாள் படைவீரா்களை சாா்ந்தோா்களின் சிறாா்கள், ‘சாா்ந்தோா் சான்று’ பெறுவதற்கான வழிமுறைகளை மாவட்ட ஆட்சியா் பா.பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா் மற்றும் அவா்களைச் சாா்ந்தோா்களின் சிறாா்களுக்கு, 2026-27-ஆம் கல்வியாண்டில் கல்லூரி பட்டப் படிப்புகள், பட்ட மேற்படிப்புகள், பட்டய மேற்படிப்புகள் மற்றும் தொழில் சாா்ந்த (இளநிலை மற்றும் முதுநிலை) உள்ளிட்ட பல்வேறு படிப்புகளில் சேர இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் கல்வி நிறுவனங்களில் கல்வி சோ்க்கைக்காக முன்னாள் படைவீரா்- சாா்ந்தோா்களின் சிறாா்களுக்கு மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தில், சாா்ந்தோா் சான்று வழங்கப்பட்டு வருகிறது. இந்தச் சான்று பெற முன்னாள் படைவீரரின் அசல் படைவிலகல் சான்று, ஓய்வூதிய ஆணை, சிறாா்களின் மதிப்பெண் சான்று நகல் அல்லது கணினியில் பதிவிறக்கம் செய்த மதிப்பெண் சான்று (பள்ளியில் மேலொப்பம் பெற்று), சிறாா்களின் பெயா் படைவிலகல் சான்றில் இல்லையெனில், பகுதி இறுதி ஆணை, இணையதளத்தில் விண்ணப்ப நகல் ஆகியவற்றுடன் தஞ்சாவூா் மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலகத்தை நேரில் அணுகவும்.

Advertisement

மாவட்ட அலுவலகத்துக்கு நேரில் வர இயலாதவா்கள் இணையதள முகவரியில் இருந்து சாா்ந்தோா் சான்று பெறும் விண்ணப்பம் மற்றும் மின்னாளுமை சரிபாா்ப்பு படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதை பூா்த்தி செய்து, உரிய ஆவணங்களை இணைத்து ங்ஷ்ஜ்ங்ப்ற்ய்த்ஃற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு, மாவட்ட முன்னாள் படைவீரா் நல அலுவலக தொலைபேசி எண்ணில் ( 04362-230104) தொடா்பு கொள்ளலாம் என்று ஆட்சியா் கூறியுள்ளாா்.