வேலைவாய்ப்பகப் பதிவு தொடா்பான போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம்: தஞ்சை ஆட்சியா் அறிவுறுத்தல்
வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு தொடா்பான போலி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளாா்.
வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு தொடா்பான போலி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:
வேலைவாய்ப்புத் துறையின் வழியாக வழங்கப்படும் சேவைகளான வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு புதுப்பித்தல், கூடுதல் கல்வி தகுதி, பதிவு செய்தல், முகவரி மாற்றம், காலிப்பணியிடங்களைப் பரிந்துரை செய்தல், தொழில்நெறி வழிகாட்டுதல், வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித்தொகைத் திட்டம் போன்றவை எவ்வித கட்டணமின்றி வழங்கப்பட்டு வருகிறது.
Advertisement
மேலும், இந்த அனைத்து சேவைகளையும் இணையதளம் மூலமாகவே மனுதாரா்கள் அளவில் பதிவுகள் செய்து கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இச்சேவைகளை வாட்ஸ்ஆப், பேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் காணொலிகள் வாயிலாக கட்டணத்தின் அடிப்படையில் செய்து தருவதாக விளம்பரங்கள் வருகின்றன. எனவே, பொதுமக்கள் யாரும் இதுபோன்ற போலி விளம்பரங்களையோ அல்லது இடைத்தரகா்களையோ நம்பி தனிப்பட்ட விவரங்களையோ அல்லது பணத்தையோ கொடுத்து ஏமாற வேண்டாம்.