ஐஐடி போன்ற அகில இந்திய நுழைவுத் தேர்வுக்கு அரசுப் பள்ளி மாணவர்களும் தகுதி பெறும் வகையில், ஆசிரியர்கள் பயிற்சி அளிக்க வேண்டும் என்றார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ. சாந்தி.
புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனம் சார்பில் முதல்வர் என். செல்லத்துரை தலைமையில் நடைபெற்ற அரசு, அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் முதுநிலை ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சியை வியாழக்கிழமை தொடங்கிவைத்து அவர் பேசியது:
ஆசிரியர்கள் 100% தேர்ச்சியில் தீவிர கவனம் செலுத்துவதுடன், கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும். அப்போதுதான் ஐஐடி போன்ற அகில இந்திய நுழைவுத் தேர்வுகளில் அரசுப் பள்ளி மாணவர்களும் தேர்ச்சி பெற முடியும். அதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து, அதை செயல்படுத்த ஆசிரியர்கள் பாடுபட வேண்டும்.
வரும் கல்வியாண்டில் புதுக்கோட்டை மாவட்ட அரசு பள்ளிகள் மாநில அளவில் முதலிடம் பெறும் வகையில் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும் என்றார்.
அரசு கல்வியியல் கல்லூரி முதல்வர் உமாராணி பயிற்சி வளங்களை பயன்படுத்தி கற்றல் கற்பித்தலை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கினார்.
3 நாட்கள் நடைபெறவுள்ள இப்பயிற்சியில் தமிழ், இயற்பியல், வணிகவியல், கணக்குப் பதிவியல் பாடங்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
பாலசுப்ரமணியம், தவமணிராஜ், ராஜ்குமார், மாரியப்பன், ஆனந்தராஜ், பழனிச்சாமி, பழனிச்சாமி ஆகியோர் வெவ்வேறு பாடங்களுக்கு பயிற்சி ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர். 33 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் கருத்தாளர்களாக செயல்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.