திருச்சி

மணப்பாறை அருகே அடுத்தடுத்து பேருந்துகள் மோதல்: 28 பேர் காயம்

DIN

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே புதன்கிழமை மாலை அடுத்தடுத்து பேருந்துகள் மோதிக் கொண்டதில் 28 பேர் பலத்த காயமடைந்தனர்.
மணப்பாறை அருகே திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கல்லாமேடு அடுத்த சேத்துப்பட்டி பிரிவில் மதுரை நோக்கி சென்றுகொண்டிருந்த கார் ஒன்று பழுதாகி நின்று கொண்டிருந்தது. அப்போது, திருச்சியிலிருந்து மதுரை நோக்கி சென்ற மணல் லாரி, பழுதாகி நின்ற கார் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் பிரேக் போட்டுள்ளார். அச்சமயம், மதுரை நோக்கி சென்ற அரசுப் பேருந்து லாரியின் பின்புறத்தில் மோதியது. இதில், பேருந்தில் பயணம் செய்த 14-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர்.
உடனே அவர்கள் அனைவரும் மணப்பாறை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிலர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதையடுத்து விபத்து நடந்து சற்றுநேரத்தில் அப்பகுதியை கடந்து செல்ல முயன்ற பேருந்து மீது பின்னால் வந்த தனியார் ஆம்னி பேருந்து மோதியது. இதில்,தனியார் பேருந்தில் இருந்த 10-க்கும் மேற்பட்டோர், அரசுப் பேருந்தில் இருந்த நான்கு பேரும் பலத்த காயமடைந்தனர். அவர்களும் மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT