திருச்சி

ஏழை மக்கள் பயன்பெற செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும்

DIN

ஏழை மற்றும் கிராமப்புற பொதுமக்களுக்கு தரமான சிகிச்சை கிடைக்க செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும என திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி முன்னாள் துணை முதல்வரும் மூளை நரம்பியல் துறை மருத்துவ நிபுணருமான எம்.ஏ. அலீம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:மாநிலத்தின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள திருச்சிக்கு அருகில் செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்தால் திருச்சி மற்றும் 10 மாவட்டங்களைச் சேர்ந்த ஏழை மக்கள் பயன் பெற முடியும். மேலும், செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான தேவையான சுமார் 200-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் உள்ளது. செங்கிப்பட்டிக்கு அருகே பிரபல மருத்துவமனைகள் ஏதுமில்லாததால், எளிதில் திருச்சி விமான நிலையம் வழியாகவும், ரயில் நிலையம் மூலமாகவும் தஞ்சை பிரதான சாலை வழியாக செங்கிப்பட்டியை எளிதில் அடையமுடியும்
எனவே, செங்கிப்பட்டி பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக அவர், குடியரசுத் தலைவர், பிரதமர், தமிழக முதல், மத்திய, மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

SCROLL FOR NEXT