திருச்சி

திருச்சியில் ரஷிய கல்வி கண்காட்சி இன்று தொடக்கம்

DIN

திருச்சியில் ரஷிய கல்விக் கண்காட்சி செவ்வாய்க்கிழமை ( ஜூன் 13) தொடங்குகிறது.
இதுகுறித்து ரஷிய கலாசார மையத்தின் இயக்குநர் மைக்கேல் ஜே. கோர்படவோவ் கூறியது: திருச்சி கண்டோன்மென்ட் வில்லியம்ஸ் சாலையிலுள்ள பெமினா ஹோட்டலில் நடைபெறும் கண்காட்சியில் ரஷிய நாட்டின் மருத்துவம், பொறியியல், ஏவியேஷன் கல்வியைக் கற்பிக்கும் முன்னணி அரசு கல்வி நிறுவனங்கள் பங்கேற்கின்றன.ரஷியாவிலுள்ள பல்வேறு மருத்துவக் கல்வி நிலையங்களில் 500 மருத்துவப் படிப்புக்கான இடங்களை இந்திய மாணவர்களுக்கு 30 சதவீத சலுகைக் கட்டணங்களில் வழங்க உள்ளன. கண்காட்சியின் ஒரு பகுதியாக, அண்மையில் நடைபெற்ற முதல் கட்ட ரஷிய கல்விக் கண்காட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய மாணவர்களுக்கு முன் புறப்பாடு நோக்குநிலை நிகழ்ச்சி தென்னிந்திய ரஷிய கூட்டமைப்பால் நடத்தப்படும்.
பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் பட்டபடிப்புச் சான்றிதழ்களை சமர்ப்பிக்கும் மாணவர்களுக்கு இளநிலை, முதுநிலைப் படிப்புகளுக்கான சேர்க்கைக் கடிதம் கண்காட்சியில் வழங்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைமைச் செயலகம் படத்தின் டீசர்

தேர்தலில் வாக்களிக்காதது ஏன்?: ஜோதிகா விளக்கம்!

கண் அழைக்குது..!

ஐசிசி தரவரிசை வெளியீடு: டெஸ்ட்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!

புதிய 400சிசி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது பஜாஜ்!

SCROLL FOR NEXT