முகப்பு
திருச்சி

விஷம் குடித்த கல்லூரி மாணவி  சாவு

விஷம் குடித்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த  மாணவி  உயிரிழந்தார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

விஷம் குடித்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த  மாணவி  உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம், குளித்தலையைச் சேர்ந்தவர் பொன்னுசாமி மகள் ரமாபிரியா (17). இவர் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பேஷன் டெக்னாலஜி பட்டப்படிப்பு படித்து வந்தார்.  கடந்த 2 தினங்களுக்கு முன் குளித்தலையிலிருந்து திருச்சி வந்த அவர், சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து பாரதிதாசன் பல்கலைக்கழகம் செல்ல பேருந்தில் ஏறி அமர்ந்தபோது, அருகிலிருந்த தனது தோழியிடம் தான், விஷம் குடித்துவிட்டதாகக் கூறியுள்ளார். இதையடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சிகிச்சை பலனின்றி இறந்தார். கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →