திருச்சி

இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மீது ஐஜி அலுவலகத்தில் விவசாயிகள் புகார்

DIN

கடந்தாண்டு பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காமல் உள்ள இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்சி காவல்துறை சரக ஐஜி அலுவலகத்தில் தமாகா விவசாய அணியினர் சனிக்கிழமை புகார் மனு அளித்தனர்.
தமாகா விவசாயி அணி மாநிலத்தலைவர் புலியூர் நாகராஜன், பொதுச் செயலர் தியாகராஜன், மாவட்ட நிர்வாகிகள் செல்வம், ராஜாராம், துரைராஜ் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் திருச்சி காவல்துறை சரக ஐஜி அலுவலகத்துக்கு சனிக்கிழமை வந்தனர். அவர்களில் முக்கிய நிர்வாகிகள் சிலரை மட்டும் மனு அளிக்க அனுமதித்தனர். அந்த மனுவின் விவரம்: கடந்தாண்டு ஏற்பட்ட வரலாறு காணாத வறட்சியின் காரணமாக சம்பா நெல்பயிர்கள் காய்ந்து போனது. அதற்கான இழப்பீட்டு தொகையாக மத்திய அரசு ரூ.20,028 கோடியை 6 லட்சம் விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. இந்ததொகை அந்தந்த இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுவிட்டது. ஆனால், தனியார் மற்றும் அரசு சார்ந்த இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இழப்பீட்டுத் தொகையை வழங்காமல் பலமாதங்களாக காலம் தாழ்த்தி வருகின்றன.
இதுதொடர்பாக, ஆட்சியர், வேளாண்மைத் துறை தலைமையிடம், இன்சூரன்ஸ் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும், நேரில் மனுக்கள் கொடுத்தும் பலனில்லை. விவசாயிகள் பிரிமீயம் தொகை கட்டியும், இன்சூரன்ஸ் வழங்குவதற்கான பயிர் பாதிப்பு எவ்வளவு என்பது அறிக்கையும் வேளாண்மைத்துறை சார்பில் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் வேளாண்மைத்துறை வழங்கியும் காலதாதம் செய்துவருகிறது. மேலும், அரசிடமும் பணம் பெற்றுக்கொண்டு வழங்காமல் உள்ளது மோசடி நடவடிக்கையாகும்.
நிகழாண்டுக்கான சம்பா சாகுபடி பணிகள் நடந்து வரும் சூழலில் கடந்தாண்டுக்கான இழப்பீட்டுத்தொகை வழங்காமல் இருப்பதால், நிகழாண்டு 2017-18 காப்பீட்டு கட்டணம் செலுத்த விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே, காவல்துறை சார்பில் இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் உரிய விசாரனை நடத்தி சம்பா பயிருக்கான இழப்பீட்டுத் தொகையை பெற்றுத் தர வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: தமிழக தொகுதிகளில் அதிகாரபூர்வ வெற்றி அறிவிப்பு!

110 வாக்குகளில் தோல்வியா? காங்கிரஸ் எதிர்ப்பால் மறுஎண்ணிக்கை!

நீலகிரி, தர்மபுரி, தஞ்சாவூர் தொகுதிகளில் திமுக வெற்றி!

உ.பி.: வேட்பாளர்களின் இறுதி நிலவரம் என்ன?

இந்தியா கூட்டணியுடன் உறவா? தெலுங்கு தேசம் விளக்கம்

SCROLL FOR NEXT