திருச்சி

நன்னடத்தை காரணமாக  தண்டனை காலத்துக்கு முன்பே 776 கைதிகள் விடுவிப்பு: சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. தகவல்

DIN

நன்னடத்தையின் அடிப்படையில், 776 கைதிகள் அவர்களின் தண்டனைக் காலம்  முடியும் முன்பே விடுதலை செய்யப்படவுள்ளனர் என்றார் சிறைத்துறை ஏ.டி.ஜி.பி.,   சி. சைலேந்திரபாபு.
திருச்சி மத்திய சிறையில் வளாகத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக  மூடிக்கிடந்த சிற்றுண்டிச்சாலை, இனிப்பகம் மற்றும் ரெடிமேட் ஆடைகள் விற்பனை மையம் ஆகியவற்றை திங்கள்கிழமை திறந்துவைத்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
சிறைவாசிகள் மீதான மக்களின் எண்ணத்தை மாற்றும்விதமாக, சிறை வளாகங்களில்  காய்கறிகள் விளைவிக்கப்படுகிறது. மேலும் குறைந்த விலையில் ரெடிமேட் ஆடைகள், பர்னிச்சர்களும் சிறைவாசிகளால் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அவைகளை சந்தைப்படுத்தும் விதமாக சிற்றுண்டிச் சாலை, இனிப்பகம் மற்றும் ரெடிமேட் ஆடைகள் விற்பனையகம் திறந்து வைக்கப்படுகிறது.
அனைத்து சிறைகளிலும் கைதிகள் செல்லிடப்பேசி பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில், ஜாமர் கருவிகள் பொருத்தும் பணிகள் ரூ. 5 கோடியில் நடைபெற்று வருகின்றன. சிறைத்துறை ஏ.டி.ஜி.பி., மற்றும் கண்காணிப்பாளர்களுக்கு உள்ள அதிகாரத்தின் மூலம், நன்னடத்தை  விதிகள் மூலம், 22 பெண் உள்பட 776 கைதிகள் அவர்களின் தண்டனைக் காலம்  முடியும் முன்பே விடுதலை செய்யப்பட உள்ளனர் என்றார் அவர்.
தொடர்ந்து, சிறைவாசிகள் நலதினத்தையொட்டி, கைதிகளின் குறைகளைக் கேட்டறிந்தார். பேட்டியின் போது, திருச்சி சிறைத்துறை டி.ஐ.ஜி., ஜெயபாரதி, கண்காணிப்பாளர் நிகிலா நாகேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT