திருச்சி

காவிரி ஆற்றில் மணல் திருட்டு

DIN

திருவானைக்கா பகுதியில் உள்ள கும்பகோணத்தான் சாலையில் இரவு நேரங்களில் காவிரி ஆற்றில் இருந்து அனுமதியின்றி மாட்டுவண்டியில் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதற்காக தனியார் இடத்தில் மாட்டுவண்டி செல்லும் அளவுக்கு பாதை அமைத்துள்ளனர். சுமார் 50 க்கும் மேற்பட்ட மாட்டுவண்டிகளில் விடிய விடிய மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர்.இவர்கள் காவிரி ஆற்றில் மணல் எடுத்து வருவதால் அப்பகுதியில் ஆங்காங்கே குழிகள் ஏற்படுகின்றன. மேலும், ஆற்றில் அவ்வப்போது தண்ணீர் திறந்து விடப்படும்போது, இந்தக் குழிகளில் சிக்கி சிலர் உயிரிழக்கும் சம்பவங்களும் நடைபெறுகின்றன. ஆகவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஜித் படத்தில் சிம்ரன், மீனா?

மரத்தில் கார் மோதி விபத்து: தாயுடன் மகன் பலி

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

SCROLL FOR NEXT