திருச்சி

ரூ.12.28 லட்சம் தங்கம் பறிமுதல்

DIN

திருச்சி விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் திங்கள்கிழமை இரவு வரை நடந்த சுங்கச் சோதனையில் 3 பயணிகளிடம் இருந்து ரூ.12.28 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வந்த விமானத்தில் பயணிகளின் உடமைகளை வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டபோது, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் என்ற பயணியிடம் 90.20 கிராம் எடையுள்ள ரூ.2.83 லட்சம் மதிப்புள்ள தங்க சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல, மலேசியாவிலிருந்து திருச்சிக்கு திங்கள்கிழமை வந்த விமானத்தில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த சேவுகபெருமாள் என்ற பயணியிடம் 149.8 கிராம் எடையுள்ள ரூ.4.70 லட்சம் மதிப்புள்ள தங்க கம்பிகள் பறிமுதல் செய்யப்பட்டன.  மற்றொரு விமானத்தில் வந்த பயணியிடம் 150 கிராம் எடையுள்ள ரூ. 4.75 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, மூவரிடமும் விசாரணை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT