திருச்சி

மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

DIN

ரயில்களில் தனிப்பெட்டி ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
தமிழ்நாடு அனைத்து வகை  மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கம், தேசிய பார்வையற்றோர் உரிமைகள் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்துக்கு, மாற்றுத்திறனாளிகள் சங்க மாநிலத் தலைவர் பி. ஜீவா தலைமை வகித்தார். திருச்சி மாவட்ட தலைவர் ஜெயபால் போராட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினார். நிர்வாகிகள் சி.புஷ்பநாதன், ஆர். ரவி, பிப. குமார், ஆர். சுப்பிரமணி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். 
ரயில் நிலையங்களில் பேட்டரி கார் வசதி இலவசமாக தரவேண்டும். மாற்றுத்திறனாளி நலன் குழு அமைக்க வேண்டும்.  ரயில்களில் பிரத்யேக பெட்டி அமைக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
துப்பாக்கித்தொழிற்சாலை ஊழியர்கள் உண்ணா விரதம் : நவல்பட்டு துப்பாக்கித் தொழிற்சாலையில் பணியாற்றும் ஐஎன்டியுசி தொழிற்சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். நிகழ்ச்சிக்கு ஐஎன்டியுசி தலைவர் வேதநாராயணம் தலைமை வகித்தார். சந்திரசேகரன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். இணை செயலாளர் பாஸ்கர், உதவி செயலாளர் ஆரோக்கியதாஸ் உள்ளிட்ட 4 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT