திருச்சி

தேவாலயங்களில் சாம்பல் புதனுடன் தொடங்கியது தவக்காலம்

DIN

கிறிஸ்தவர்களின் முக்கிய வழிபாடாகக் கருதப்படும் 40 நாள் தவக்காலம் சாம்பல் புதன் அனுசரிப்புடன் புதன்கிழமை தொடங்கியது.
இயேசுவின் உயிர்ப்பு தினத்திற்கு முந்தைய (ஞாயிற்றுக் கிழமைகள் தவிர்த்த) 40 நாள்கள் கிறிஸ்தவர்களால் தவக் காலமாக கடைப்பிடிக்கப்படுகிறது. தவக்காலம் என்பது தவறுகளை உணர்ந்து திருந்தவும், நம்மை நாமே அறிந்து நம்மை இறைவனின் வழியில் கொண்டு வரவும் தரப்பட்டிருக்கும் காலம் எனக் கருதுகின்றனர். இந்நிகழ்ச்சி கி.பி 900 ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டதாகவும், முதலில் சாம்பல் தினம் என்று அழைக்கப்பட்டதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. இதன் தொடர்ச்சியாக ஈஸ்டர் பண்டிகையும் கொண்டாடப்படுகிறது. தவக்காலத்தில் மாமிச உணவுகளையும், ஒரு வேளை உணவையும் தவிர்த்து விரதமிருப்பது வழக்கம்.
இதன்படி, நிகழாண்டு தவக்காலம் புதன்கிழமை சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதன்படி, திருச்சி மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. தேவாலய பங்குத் தந்தையர்கள், சிறப்பு திருப்பலியில் பங்கேற்றவர்களின் நெற்றியில் சாம்பலால் சிலுவைக் குறியிட்டு தவக்காலத்தைத் தொடக்கி வைத்தனர்.
திருச்சி மேலப்புதூர் தூய மரியன்னை பேராலயம், மெயின்கார்டுகேட் புனித லூர்து அன்னை ஆலயம், பாலக்கரை உலக மீட்பர் பசிலிக்கா (சகாயமாதா திருத்தலம்) பழைய மாதா தேவாலயம், புத்தூர் பாத்திமா அன்னை தேவாலயம், உறையூர் சி.எஸ்.ஐ. ஆல் செயின்ட்ஸ் தேவாலயம், பொன்மலை புனித சூசையப்பர் ஆலயம், கல்லுக்குழி புனித அந்தோனியார் ஆலயம், ஜங்ஷன் தூய யோவான் ஆலயம், ஸ்ரீரங்கம் அமல அன்னை ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களில் சாம்பல் புதன் நிகழ்வுகள் நடைபெற்றன. திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT