திருச்சி

நாடு முழுவதும் ஜூன் 1-க்குள் இணைய வழி சீட்டு நடைமுறை: கலால் வரி இணை ஆணையர் தகவல்

DIN

வணிகப் பொருள்களுக்கு,  நாடு முழுவதும் வரும் ஜூன் 1ஆம் தேதிக்குள்  இணைய வழிச் சீட்டு பதிவு செய்யும் முறை அமல்படுத்தப்படும் என்றார் மத்திய கலால் வரித்துறை இணை ஆணையர் இளங்கோ.
சரக்கு வணிகத்தில் பொருள்களை கொண்டு செல்ல, மின் இணைய வழிச்சீட்டு  பயன்படுத்துவது குறித்த விளக்க நிகழ்ச்சி, திருச்சி மத்திய கலால் வரி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்து. இதில் பங்கேற்ற இளங்கோ மேலும் பேசியது:
சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பின் படி, வரும் பிப்ரவரி மாதம் முதல் தேதியிலிருந்து, சரக்குகளை கொண்டு செல்லும்போது ரூ. 50,000-க்கும் அதிகமான மதிப்பு கொண்ட பொருள்களுக்கு மின் இணைய வழிச்சீட்டுகளை (இ வே பில்) பொருள்களுடன் கொண்டு செல்ல வேண்டும். 
 அவற்றை பொது வலைதளத்தில் உருவாக்கம் செய்ய வழி வகை செய்யப்பட்டுள்ளது. அது குறித்து  பொருள்களை அனுப்புவோர், பெற்றுக்கொள்வோர், வணிகர்கள் என அனைத்துத் தரப்பினரும் தெரிந்து கொள்வது அவசியம்.
 மின் இணைய வழிச்சீட்டு முறை நடைமுறைக்கு வந்துவிட்டால், வணிகத்தின்போது, இடையில் சோதனைகள் என்ற பெயரில் ஏற்படும் தடைகள் மற்றும் பிரச்னைகளுக்கு இடமிருக்காது. 
அனைத்தும் வெளிப்படையாகிவிடும். தமிழகம் தவிர அண்டை மாநிலங்களான கர்நாடகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இம்முறை நடைமுறைக்கு வந்துவிட்டது.  தமிழகத்தில் வரும் பிப். 1-ஆம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வரப்படும் இந்த முறை நாடு முழுவதும் வரும் ஜூன் 1-ஆம் தேதிக்குள் நடைமுறைப்படுத்தப்படும்.  அதன் பின்னர் இணைய வழி  ( மின் ) சீட்டு இல்லாமல் ரூ. 50 ஆயிரத்துக்கும் மேல் மதிப்புள்ள பொருள்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது. 
இணைய வழிச்சீட்டு பயன்படுத்தாமல் பொருள்களை கொண்டு செல்வோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். ஒரே மாநிலத்துக்குள் சுமார் 10 கி.மீ. இடைவெளியில் மட்டுமே இணைய வழிச்சீட்டுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
 இந்நிகழ்ச்சியில் மத்திய கலால் வரித்துறை சரக்கு மற்றும் சேவை வரிப்பிரிவு ஆணையர் கென்னடி, இணை ஆணையர் ஸ்ரீமதி, வணிகர்கள் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT