முகப்பு
திருச்சி

முருகூரில் சிறப்பு மனு நீதி முகாம்

துறையூர் வட்டம் முருகூரில் சிறப்பு மனு நீதி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

துறையூர் வட்டம் முருகூரில் சிறப்பு மனு நீதி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமுக்கு  துறையூர் வட்டாட்சியர் எஸ். சந்திரகுமார் தலைமை வகித்தார்.  சமூக பாதுகாப்பு நல தனி வட்டாட்சியர் சிவசங்கரன், மண்டலத் துணை வட்டாட்சியர் பெ. மோகன்  முன்னிலை வகித்தனர்.
பட்டா பெயர் மாற்றம், உழவர் பாதுகாப்பு அட்டை, முதியோர் உதவி தொகை, தையல் இயந்திரம், வாரிசு சான்று கோரி 162 பேர் மனு அளித்தனர். இதில் 118 மனுக்கள் உடனடி தீர்வுக்கு ஏற்கப்பட்டன. 25 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மற்ற மனுக்கள் உரிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  
முன்னதாக, வருவாய் ஆய்வர் வி. கௌரி வரவேற்றார். முடிவில் கிராம நிர்வாக அலுவலர் பிரபு நன்றி கூறினார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →