வாலிபால் : சூப்பர் லீக்கில் விளையாட 4 கல்லூரிகள் தகுதி
திருச்சியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான வாலிபால் போட்டியின் சூப்பர் லீக்கில் விளையாட 4 கல்லூரிகள் தகுதி பெற்றுள்ளன.
திருச்சிவாலிபால் : சூப்பர் லீக்கில் விளையாட 4 கல்லூரிகள் தகுதி
திருச்சியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான வாலிபால் போட்டியின் சூப்பர் லீக்கில் விளையாட 4 கல்லூரிகள் தகுதி பெற்றுள்ளன.
திருச்சியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான வாலிபால் போட்டியின் சூப்பர் லீக்கில் விளையாட 4 கல்லூரிகள் தகுதி பெற்றுள்ளன.
பிஷப் ஹீபர் கல்லூரி சார்பில் நடத்தப்படும் பொன்விழா ஆண்டு ஜி.எச். லாண்டர் கோப்பைக்கான மாநில அளவிலான வாலிபால் போட்டிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின. 12 கல்லூரிகள் 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
புதன்கிழமை நடைபெற்ற போட்டியில், திண்டுக்கல் காந்தி கிராம நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தை 25-21, 16-25, 25-17 என்ற புள்ளிக்கணக்கில் திருப்பத்தூர் தூய இருதயக் கல்லூரியும், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியை 25-16, 25-13 என்ற புள்ளிக்கணக்கில் சென்னை டி.ஜி. வைஷ்ணவ கல்லூரியும் வென்றது.
திண்டுக்கல் காந்தி கிராம நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தை 25-14, 25-19 என்ற புள்ளிக்கணக்கில் கோவை ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தை 25-12, 25-9 என்ற புள்ளிக்கணக்கில் சென்னை லயோலா கல்லூரியும், மற்றொரு போட்டியில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தை 25-17, 25-13 என்ற புள்ளிக்கணக்கில் திருச்சி ஜமால் முகமது கல்லூரி வென்றது.
லீக் போட்டிகளில் 4 பிரிவுகளில் முதலிடம் பிடித்த திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி, சென்னை லயோலா, டி.ஜி. வைஷ்ணவ கல்லூரிகள், கோவை ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவை சூப்பர் லீக் போட்டிகளில் விளையாட தகுதி பெற்றன.