முகப்பு
திருச்சி

எரகுடி பள்ளியில் அறிவியல் கண்காட்சி

துறையூர் அருகே எரகுடி ஸ்ரீராமகிருஷ்ணா வித்யாலாயா நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளியில் புதன்கிழமை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

துறையூர் அருகே எரகுடி ஸ்ரீராமகிருஷ்ணா வித்யாலாயா நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளியில் புதன்கிழமை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
கண்காட்சியை பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் டி. முத்துகுமார் தலைமை வகித்து தொடக்கி வைத்தார். தாளாளர் டி.சுகுமார் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் ரேணுகா வரவேற்றார்.
எரிமலை, ராக்கெட், கோள்கள், பாதுகாப்பான உணவு மற்றும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு குறித்த அறிவியல் மாதிரிகளை மாணவ, மாணவிகள் காட்சிப் படுத்தியிருந்தனர். இதனை பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →